நுவரெலியாவில் பேருந்து விபத்து - 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தில் - 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவிலிருந்து சுற்றுலா சென்ற அதிசொகுசு தனியார் பேருந்து பாதையை விட்டுவிலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

குறித்த விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - நீலமேகம் பிரஷாந், திவா
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan