ரணிலின் ஆலோசனைக்கமைய நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகச் சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்கேற்புடன் இன்றைய தினம் (08.05.2023) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைகள் முன்வைப்பு
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், நகர அபிவிருத்தி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது நுவரெலியா நகரை சிறப்பானதொரு சுற்றுலா தளமாக மாற்றுவதற்குத் தேவையான விடயங்கள் தொடர்பில் கருத்துகளும், ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆய்வுகளின் பின்னர் நடவடிக்கை
இவை தொடர்பில் ஆராய்ந்து, உரிய ஆய்வுகளின் பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 இற்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய இக்குழுவில் சுற்றுலாத்துறை, பாதுகாப்பு, நிர்வாகம், திட்டமிடல் துறைசார் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
you may like this Video




படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
