நுவரெலியா சீதை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா
நுவரெலியாவில் (Nuwara eliya) வரலாற்றுச் சிறப்பு மிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவின் முதல் நாள் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கும்பாபிஷேக தினத்தின் முதலாவது நாளான நேற்று (17.05.2024) விநாயகர் வழிபாட்டுடன் புண்ணிய வாசகம் லட்சுமி நாராயண ஹோமம், நவக்கிரக ஹோமம், கிராம சாந்தி பிரவேசப்பலி சூரிய சந்திர அக்னி சங்கிரனம் மற்றும் புதிய மூர்த்தி அதினசாதி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
மஹா கும்பாபிஷேகம்
இதனை தொடர்ந்து, புதிய சிலைகளுக்கு தீர்த்த உற்சவம் நடைபெற்றதுடன் பக்தர்கள் அனைவருக்கும் விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, இடம்பெற்ற பூஜைகளில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ராமபிரானின் அருளுடனும் சீதாபிராட்டியின் ஆசியுடனும் நடைபெற திருவருள் பாலித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் (18) எண்ணெய்க்காப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எனவே பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொண்டு இறையருளை பெறுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |