நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் கைது விவகாரம்: உறுப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - வெளியான உண்மைகள்

Sri Lanka Police Sri Lanka Upcountry People Nuwara Eliya Sri Lanka Politician Sri Lankan Peoples
By Dhushi Apr 25, 2026 07:09 AM GMT
Report

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாகவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பாலகிருஷ்ணன் பத்மசிறி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (24.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள தவெக விஜயின் பதிவு! மறைக்கப்பட்ட அறிக்கை

அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள தவெக விஜயின் பதிவு! மறைக்கப்பட்ட அறிக்கை

ஊழல் மோசடி குற்றச்சாட்டு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நுவரெலியா பிரதேச சபையின் அதிகார வரம்புக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் அபிவிருத்தித் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விடயத்தில், நில உரிமையாளர் ஒருவருக்கு முறையற்ற ஆதாயம் கிடைக்கச் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் கைது விவகாரம்: உறுப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - வெளியான உண்மைகள் | Nuwara Eliya Pradeshiya Sabha Chairman Arrested

இதனைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரின் பிணை மனுவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், சந்தேகநபரை ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆதரவாளர்களை வைத்து தாக்கிய பிரதேச சபை தலைவர்

இதற்கிடையில், நேற்றைய தினம் வேலு யோகராஜின் ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரதேச சபை உறுப்பினர் பாலகிருஷ்ணன் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வேலு யோகராஜ் பதவியில் இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பிலும், கந்தபுல பகுதியில் உள்ள நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்கியமை தொடர்பிலும், மேலும் வீதி புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டதாகவும் முறைப்பாடுகள் அளித்துள்ளேன்.

நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் கைது விவகாரம்: உறுப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - வெளியான உண்மைகள் | Nuwara Eliya Pradeshiya Sabha Chairman Arrested

இதனைத் தொடர்ந்து, நேற்று (24) அடையாளம் தெரியாத மூவர் தன்னை தாக்கினார்கள். இந்த தாக்குதலுக்கு வேலு யோகராஜின் ஆதரவாளர்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது என்னிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்ய வருகை தந்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.  

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பாரிய வீழ்ச்சி - மத்திய வங்கி அறிவிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பாரிய வீழ்ச்சி - மத்திய வங்கி அறிவிப்பு


மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US