நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியாவுக்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலியா சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 முதல் 14ஆம் திகதி வரை பயணிகள் அதிகளவில் வந்ததாகவும், நீண்ட நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வராததால் மூடப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகளிலுள்ள அறைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக கொவிட்-19 தொற்று நோய் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு நீண்ட நாட்களாக வரவில்லை.
தொற்று நிலைமை தணிந்த பின்னர், எரிபொருள் பெறுவதில் ஏற்பட்ட தடைகளால் நுவரெலியாவில் சுற்றுலாத்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
வார இறுதி விடுமுறைக்காக நுவரெலியாவுக்கு வருகை தந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் விக்டோரியா பூங்கா, கிரிகோரி ஏரி, சூழலியல் பூங்கா, கந்த அல, ஹோர்டன் சமவெளி போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாகும்.