சுற்றுலா பயணிகளை கவர்ந்த நுவரெலியா - கிரகரி வாவி!
நுவரெலியாவின் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
இதில் கிரகரி வாவிக்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.
குறிப்பாக கிரகரி வாவி கரையோரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நுவரெலியா மாநகர சபை ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[]
சுற்றுலா பயணிகள்
இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற சகல வசதிகளுடன் கூடிய ஏராளமான ஹோட்டல்களும் இப்பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
