மாணவர்களுக்கு போஷாக்கான உணவு! ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர்(Photos)
கொட்டகலை - லிந்துலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கு போஷாக்கான உணவு வழங்கும் திட்டம் தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் இந்த உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
6200 மாணவர்கள் பயன்பெறுவர்

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 54 பாடசாலைகளைச் சேர்ந்த 6200 பிள்ளைகளுக்கு காலை நேர உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஒரு பாடசாலை மாணவருக்கு 100 ரூபாய் என்ற அடிப்படையில் இந்த உணவுப் பொதி வழங்கப்படவுள்ளது.
இன்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
போஷாக்கான உணவுகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam