வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரச தாதி உத்தியோகத்தர் சங்கம்
அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம் (7) திங்கட்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து , பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன் வைத்து தீர்வு கிடைக்கும் வரையில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே
தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அறிவித்துள்ளனர்.



