பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தாதியர்கள்
வவுனியா வைத்தியசாலை தாதியர்கள் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தூர பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வருகை தந்த முதியவர்கள், தாய்மார்கள், உள்ளிட்ட பலரும் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் முன்னரே தெரிந்திருந்தால் பணம் செலவழித்து, சிரமத்தின் மத்தியில் வைத்தியசாலைக்கு வந்திருக்க மாட்டோம் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.








போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
