யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு(Video)
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் சேவை, என்பனவற்றின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தற்போது 3000 ரூபாவாக உள்ள விசேட கடமைக் கொடுப்பனவை 10000 ரூபாவாக உயர்த்துதல், ஆசிரியர் சேவை சம்பள உயர்வின் மூலம் தாதிய சேவைக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல், தொழில் வல்லுநர் பட்டதாரிகளுக்குத் திருத்தியமைத்த சம்பள அளவுத் திட்டத்தை நிர்ணயத்துடன் தகுந்த பதவி வாய்ப்புக்களைக் கிடைக்கச் செய்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan