கொவிட் நோயாளிகளின் மோசமான செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட தாதிகள்
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட கொவிட் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றிய 9 பணியாளர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகியமையினால் நேற்று முன்தினம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 07 பேர் தாதி எனவும் இருவர் ஊழியர் குழுவை சேர்ந்தவர்களாகும்.
விசேட கொவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற தொற்றாளர்கள் இருவர் மோசமான முறையில் செயற்பட்டமையினால் இவ்வாறு 9 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியதாக வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு தொற்றாளர்களும் சிகிச்சை பிரிவிற்குள் வன்முறையான முறையில் செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையை கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்த தாதி உட்பட சுகாதார ஊழியர்களுக்கு குறித்த தொற்றாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது தாதி மற்றும் ஊழியர்களின் முகக் கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகளை நீக்கவும் இந்த தொற்றாளர்கள் இருவரும் முயற்சித்துள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று சில நாட்களின் பின்னர் தாக்குதலுக்குள்ளான தாதி மற்றும் ஏனைய ஊழியர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குற்றம் சுமதத்ப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
