எல்லையோரப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தாதியர் தொடர்பில் கசிந்த காணொளி
கடந்த வாரம் எல்லையோரப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தாதியர் அலெக்ஸ் ப்ரெட்டி, இறப்பதற்கு முன்னர் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்திலும் மோதலிலும் ஈடுபட்ட காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த காணொளி கடந்த ஜனவரி 13ஆம் திகதி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரல் காணொளி
வெளியான காணொளியில், அலெக்ஸ் ப்ரெட்டி குடியேற்ற நடைமுறைப்படுத்தல் துறை அதிகாரிகளின் காரின் மீது தாக்குதல் நடத்தியதும், ஆத்திரத்தில் அந்த வாகனத்தின் பின்புற விளக்குகளை (Tail lights) உடைப்பதும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ப்ரெட்டியைத் தள்ளிவிட்டுக் கீழே வீழ்த்திப் பிடிப்பதையும், அங்கிருந்த கூட்டத்தைக் கலைக்கக் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதையும் காணொளி காட்டுகிறது.
இந்த காணொளியை ஆய்வு செய்ததில், ப்ரெட்டியின் இடுப்புப் பகுதியில் உரிமம் பெற்ற துப்பாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் அதை எடுக்கவோ அல்லது அதிகாரிகளை நோக்கி நீட்டவோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட தாதியர்
இந்த காணொளியில், இருப்பது அலெக்ஸ் ப்ரெட்டி தான் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அந்த மோதலின் போது ப்ரெட்டியின் விலா எலும்புகள் உடைந்ததாகவும், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

'தி நியூஸ் மூவ்மென்ட்' (The News Movement) வெளியிட்ட இந்த காணொயின் உண்மைத்தன்மையை சர்வதேச ஊடகமொன்று உறுதிச் செய்துள்ளது.
இதன்படி, காணொளி ஆதாரங்கள் குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ப்ரெட்டி, ஒரு அமைதியான போராட்டக்காரர் அல்ல என்பதற்கு இதுவே சாட்சி என்று ஒரு தரப்பினர் வாதிடும் அதே வேளையில், முந்தைய மோதலுக்கும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் தொடர்பில்லை என்று அவரது குடும்ப சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
Z0CWRP8
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam