ஆங்கில வழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையில் ஏற்படவுள்ள மாற்றம்! பிரதமர் அறிவிப்பு
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், நடைமுறை ஆங்கில கற்பித்தல் அணுகுமுறைகளை செயல்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
மொழி
ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பிப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதற்கான ஒரு கருவியாக அல்லாமல், வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில வழிப் பாடசாலைகள்
அதன்படி, ஆங்கில மொழி வெறும் தேர்வுப் பாடமாக கருதப்படாது. அதற்கு பதிலாக, மாணவர்கள் பேசும் மற்றும் எழுதும் திறன் மூலம் மொழியை தீவிரமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், ஆங்கில வழிக் கல்விக்கான தேவை அதிகரித்து வருவதால், ஆங்கில வழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 825 இல் இருந்து குறைந்தது 1,000 ஆக விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
