யாழ். மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்குள்ளான 114 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது 114 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
விடுதிகளில் இடப்பற்றாக்குறை
ஏற்கனவே இருந்த விடுதிகளில் இடப்பற்றாக்குறை காணப்பட்டதன் காரணமாக மேலதிகமாக 2 காய்ச்சல் விடுதிகளை இந்த டெங்கு நோயாளர்களுக்கென புதிதாக ஆரம்பித்திருக்கின்றோம்.

டெங்குத் தொற்றுக்குள்ளாகி விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 114 பேரில் அரை வாசிக்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சலுடன் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதேபோல அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தாதியரின் கண்காணிப்பில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
மேலும், சுகாதார அமைச்சினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டு டெங்கு தொற்றுக்குள்ளானோருக்கு மருந்து வகைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்படுகின்றது எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam