சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்கள்: வெளியாகியுள்ள தகவல்
சிங்கப்பூரில் (Singapore) புதிய கோவிட் -19 (Covid - 19) தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (Singapore Ministry of Health) தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த தகவலின் அடிப்படையில், மே 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சுமார் 25,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோவிட் தொற்றின் புதிய அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் அதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்நிலையில், இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதெனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொதுமுடக்கத்தை நடைமுறைபடுத்துவதற்கான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 22 மணி நேரம் முன்

496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல் News Lankasri
