பிரித்தானியாவில் கடந்த 28 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
பிரித்தானியாவில் கடந்த 28 நாட்களில் 34 ஆயிரத்து 526 கோவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இவர்களில் 167 பேர் உயிரிழந்துள்ளதாக நாளாந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
திங்கள் கிழமை 37 ஆயிரத்து 960 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம் 31 ஆயிரத்து 564 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 203 பேர் உயிரிழந்தனர்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய இங்கிலாந்தில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 375 எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும் தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட தனித்தனி புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இங்கிலாந்தில் ஒரு லடசத்து 61 ஆயிரம் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழில் மரணத்திற்கு காரணம் கோவிட்-19 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 27 ஆம் திகதி அரசாங்க புள்ளிவிபரங்களுக்கு அமைய பிரித்தானியாவில் 93,565, 474 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களில் 48, 765, 726 பேருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன் 26 ஆம் திகதி 24 ஆயிரத்து 919 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 44, 799, 748 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Johnson) வழங்கிய உறுதிமொழிக்கு அமைய கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தமது உறவினர்களை இழந்த குடும்பங்களை சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்தைத்தை அடுத்து மேற்கூறிய புள்ளிவிபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.