அநுரவிடம் இருந்து புலனாய்வு துறைக்கு சென்ற முக்கிய அறிக்கை.. இரண்டு வாரங்களில் அதிரடி!
நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்கட்சிகளின் பேரணி தொடர்பில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
அதேவேளை, குறித்த பேரணி குறித்து இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.
மேலும், இந்த பேரணியின் போது, பதிவாகியிருந்த பல காணொளிகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
குறிப்பாக, பேரணியில் பங்குபற்றியிருந்த ஆதரவாளர்களின் நடவடிக்கை மற்றும் மதுபோதையில் இருந்தமை தொடர்பான காணொளிகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.
அதேநேரம், நாமல் ராஜபக்ச மேடையில் இருந்த போது முன்னாள் சபாநாயகர் ஒருவரினுடைய மகன் கைத்துப்பாக்கியுடன் இருந்தமையும் பெரும் கேள்விகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார தலையமையிலான புலனாய்வு துறைக்கு கிடைத்துள்ள ஒரு முக்கிய அறிக்கை தொடர்பிலும் பேசப்படுகின்றது. இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri