அரசாங்கத்தின் மீது பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தும் பிரபல பாடகர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது பிரபல பாடகர் சங்கீத் விஜேசூரிய பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
இந்த அரசாங்கத்தினால் கைப்பற்றப்படும் போதை பொருட்கள் மீளவும் சந்தைக்கு செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெறும் கண்காட்சி என அவர் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் மீண்டும் சந்தைக்கு விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரசாங்கத்தினால் கைப்பற்றப்படும் போதைப்பொருள் பெருந்தொகை என கூறப்படுகிறது, கிலோ கணக்கில் கைப்பற்றப்படும் போதை பொருள்களுக்கு என்ன நேர்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கைப்பற்றப்படும் போதை பொருட்கள் அதிகாரிகளிடம் அல்லது நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் போது அவை மீண்டும் சந்தைக்குச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுவதில் எவ்வித பலனும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடு இவ்வளவு தூரம் அழிவடைக்கு இதுவே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் எப்பொழுதும் மக்களின் பக்கம் இருப்பதாகவும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பிழை செய்தாலும் அதனை சுட்டிக்காட்ட தயங்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு தான் ஆதரவு அளித்ததாகவும் அந்த கட்சியில் ஏதேனும் பிழை செய்தால் அவர்களை விமர்சிக்க தயங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri