இருந்தால் தேர்தலை உடன் நடத்திக் காட்டுங்கள் : அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்
துணிவு இருந்தால் மக்கள் இப்போது யார் பக்கம் என்பதை அறிய மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்திக் காட்டுங்கள் என்று தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சவால் விடுத்துள்ளார்.
என்.பி.பி. அரசுக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியது என்று சுட்டிக்காட்டியே அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.
நுகேகொடைக் கூட்டம் வெற்றியளித்துள்ளது
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டு எதிரணிகளின் நுகேகொடைக் கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள் மூலம் இனியும் நாட்டை ஆள முடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

அரசுக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது. அவ்வாறு இல்லை, மக்கள் ஆதரவு தமக்கு இப்போது இருக்கின்றது என என்.பி.பி. அரசு கூறுமானால், அதன் உண்மைத்தன்மை என்னவென்பதை அறிய மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்திக் காட்டுமாறு இந்த அரசுக்குச் சவால் விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.