நுகேகொடை பேரணியில் இஸ்லாமிய மத கடமைகளில் ஈடுபட்டவருக்கு கொலை மிரட்டல்
நுகேகொடை பேரணியில் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை நடத்திய மதத் தலைவரான மௌலவிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணித் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (24.112025) நடைபெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனைவி - குழந்தைகளும் அச்சுறுத்தல்
தொடர்ந்துரையாற்றிய அவர்,
“இஸ்லாமிய மதத் தலைவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகா சங்கத்தினரை மதிக்கக்கூடிய, விகாரையின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய மற்றும் பௌத்த கலாசாரத்தை மதிக்கக்கூடிய ஒரு அமைச்சரை நியமிக்குமாறு அரசாங்கத்தை கோருகிறோம்.
அரசியல் பேசவில்லை
21ஆம் திகதி நுகேகொடை பேரணியில் கலந்து கொண்ட எந்தத் மதத் தலைவரும் அரசியல் உரைகளை நிகழ்த்தவில்லை. அன்று கலந்து கொண்ட இஸ்லாமிய மதத் தலைவர் நிப்ராஸ் முஹம்மது மௌலவி, வீட்டிற்குச் செல்லும்போது, அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி மற்றும் குழந்தைகளையும் பயமுறுத்தியுள்ளனர். மதத் தலைவர்கள் குறிவைக்கப்பட்டு மிகவும் பாதகமான முறையில் நடத்தப்படுகிறார்கள். நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம்” எனக் கூறியுள்ளார்.