அநுர அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்! முன்னாள் ஜனாதிபதிகள் எடுத்துள்ள தீர்மானம்
கொழும்பு, நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகளில் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணியில் பங்கேற்க மாட்டார்கள்.
நவம்பர் 21 ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் பேரணியை ஏற்பாடு செய்வது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் வீட்டில் பல சிறப்புக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
மக்கள் பேரணி
எனினும், விமல் வீரவன்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் திலித் ஜயவீர தலைமையிலான சர்வ ஜன கட்சி ஆகியவை இந்த மக்கள் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan