பதற்றமான சூழலில் ஈரான் தரப்பில் இருந்து சாதகமான தகவல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த தற்போதைய பதற்றமான சூழலில், ஈரான் தரப்பில் இருந்து சாதகமான தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(17) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த நிலையில்,பொருளாதாரத் தடைகளை (Sanctions) நீக்க அமெரிக்கா முன்வந்தால், அணுசக்தி விவகாரத்தில் சமரசங்களுக்குத் தயார் என ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல்
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில் ஈரானின் இந்த சாதக செய்தி வெளியாகியுள்ளது.
ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் இருதரப்புக்கும் இடையே தகவல்களைப் பரிமாறும் பாலமாகச் செயல்படுகின்றன.

பிராந்தியத்தில் போர் ஏற்பட்டால் அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரான் எச்சரித்துள்ளது.
சுமார் 40,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பிராந்தியத்தில் இருப்பதால், மோதல் ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam