யுகதனவி மின் நிலையம் அமெரிக்காவிற்கு விற்பனை - வீதியில் இறங்க தயாராகும் ஊழியர்கள்: செய்திகளின் தொகுப்பு
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகங்கள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களும் நாளை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாளை பிற்பகல் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மின்சார பொறியியலாளர்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள மின் ஊழியர்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,