அணு ஆயுதங்களுடன் ஸ்வீடன் வான் பரப்புக்குள் நுழைந்த ரஷ்ய விமானங்களால் பரபரப்பு!
அணு ஆயுதங்களை ஏந்திய ரஷ்ய தாக்குதல் விமானங்கள் ஸ்வீடன் வான் பரப்புக்குள் நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் இந்த செயற்பாடு வேண்டுமென்றே அச்சுறுத்தும் நடவடிக்கை என ஸ்வீடனின் TV4 செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு சுகோய் 27 போர் விமானங்கள் மற்றும் இரண்டு சுகோய் 24 தாக்குதல் விமானங்கள் மார்ச் 2ம் திகதி அன்று ஊடுருவலுக்கு முன்னதாக கலினின்கிராட் விமான தளத்தில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் விமானங்களில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் ஏற்பட்ட மோதலால், ஸ்வீடன் விமானப்படை அதிக தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இரண்டு தாக்குதல் விமானங்களிலும் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க நாட்டின் ஆயுதப் படைகள் மறுத்துவிட்டன. எனினும், வான்வெளியில் அத்துமீறல் வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"போரில் ஈடுபட்டுள்ள நாடு ஒன்றின் இந்த நடவடிக்கை மிகவும் தீவிரமானது என விமானப்படைத் தலைவர் கார்ல்-ஜோஹான் எட்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இந்த சம்பவத்தை பகுப்பாய்வு செய்துள்ளோம், தவறான வழிசெலுத்தலை என்னால் நிராகரிக்க முடியாது என்பது தெளிவாகிறது, ஆனால் அவை வேண்டுமென்றே ஸ்வீடனின் எல்லைகளை மீறியதை சுட்டிக்காட்டுகிறது" என அவர் கூறியுள்ளார்.