இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 38 பேர் பலி: பலர் வைத்தியசாலையில்
மத்திய செனகலில் உள்ள காஃப்ரின் நகருக்கு அருகே இன்று இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் 87 க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தை அடுத்து அந்நாட்டு ஜனாதிபதி மேக்கி சால் நாளை முதல் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார்.
தேசிய துக்க தினம்
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
”இந்த பயங்கர சாலை விபத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தேசிய துக்கம் முடிந்த பிறகு, "சாலை பாதுகாப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க" ஒரு அரசாங்க கவுன்சில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி சால் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம்
விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக செனகல் அரச வழக்கறிஞர் தனி அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அரசு வழக்கறிஞர், Cheikh Dieng, ஆரம்ப விசாரணையில், “பயணிகளின் பொது போக்குவரத்திற்கு நியமிக்கப்பட்ட பேருந்து, டயர் வெடித்ததைத் தொடர்ந்து, அதன் பாதையை விட்டு வெளியேறியதால், எதிரே வந்த மற்றொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விபத்தின் பின்னர் இடிபாடுகள் மற்றும் இடிக்கப்பட்ட பேருந்துகள் அகற்றப்பட்டு, சாலையில் இயல்பு போக்குவரத்து ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தை ஆளுநரும், உள்ளூர் அதிகாரிகளும் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர்.
செனகலில் சாலை விபத்துகள் பொதுவானவை, பெரும்பாலும் ஓட்டுநர் ஒழுக்கமின்மை, மோசமான சாலைகள் மற்றும் பழுதடைந்த வாகனங்கள் காரணமாக ஏற்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், சமீப வருடங்களில் நேர்ந்த விபத்து சம்பவத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இறப்பு எண்ணிக்கை இது என தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
