நாட்டில் மிக அதிகமாக மக்களினால் வெறுக்கப்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் கருத்துக் கணிப்பு
நாட்டில் மிக அதிகமாக மக்களினால் வெறுக்கப்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
IHP அல்லது இன்ஸ்டியூட் ஃபோர் ஹெல்த் பொலிஸி என்ற நிறுவனத்தினால் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிருப்தி
இலங்கையின் தற்போதைய அரசியல்வாதிகள் அநேகர் தொடர்பில் மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மீது மக்கள் அதிக வெறுப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீது மக்கள் மிக அதிகளவான வெறுப்பினை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 73 வீதமானவர்கள் பசில் ராஜபக்ச மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நாமல் ராஜபக்ச மீது 65 வீதமானவர்களும், மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மீது 53 வீதமானவர்களும், ஜனாதிபதி ரணில் மீது 40 வீதான மக்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மக்களால் மதிக்கப்படும் அரசியல்வாதி
அரசியல்வாதிகளில் ஓரளவேனும் மக்களினால் மதிக்கப்படும் அரசியல்வாதிகளாக டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோரை குறிப்பிட முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலாநிதி ரவி ரன்வன்எலிய தலைமையிலான குழுவினர் IHP சார்பில் கருத்துக் கணிப்பு மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
