இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம்: வெளியாகிய பின்னணி
கொத்மலை, இறம்பொடை, பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கு பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவையே காரணம் என நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
விரிவான விசாரணை
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
மேலும், விபத்துக்கான உறுதியான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை கொத்மலை வைத்தியசாலையிலிருந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
