வட மாகாண சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும்: ஜெகதீஸ்வரன் எம்.பி
கடந்த இரு தேர்தல்களைப் போல் வரவிருக்கும் வட மாகாண சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2026 இறுதியில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளது.
தேர்தல்
இந்த தேர்தலுக்காக கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றிய அதே கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய போவதாக கூறியுள்ளன.

இதனை நினைக்கும் போது வேடிக்கையாகவுள்ளது. இவர்கள் இணைய நினைப்பது தேர்தலுக்காக மட்டுமே.அவர்கள் தமிழ் மக்களுக்காக ஒற்றுமை படுவதாக இருந்தால் தேர்தல் இல்லாத காலத்திலும் ஒற்றுமைப்பட்டு தமிழ் மக்களது உரிமைகளைப் பெறப் போவதாக கூறலாம்.
எவ்வாறாயினும், எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கில் மக்களது ஆதரவை கடந்த தேர்தல்களில் காட்டியுள்ளது. அதேபோல் வரவிருக்கும் மாகாண சபை தேர்தலிலும் மக்களுடைய ஆதரவைப் பெறும்.நாம் இதயசுத்தியுடன் வடக்கு மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம்.
போதைப்பொருள் பாவனை
2009இற்கு முன்னர் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை இவ்வாறு இருக்கவில்லை. ஆனால் அதற்கு பிற்பாடு திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

கடந்தகால அரசாங்கங்கள் இதனை செய்துள்ளன. எமது அரசாங்கம் வடக்கில் அதனை கட்டுப்படுத்தி இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் சட்டவிரோத நிதியீட்டங்கள், மறைக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam