கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை விரைவில் நிறுவுவோம் – பிரதி அமைச்சர்
கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை விரைவில் நிறுவுவோம் என புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை நிறுவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முற்போக்கான அடிப்படையில் செயற்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் என்பனவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் ஆதரவளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களை புறந்தள்ளி இவர்கள் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்கள் அடிமட்ட அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் என்ற காரணத்தினால் ஏனைய கட்சிகளும் பொதுவான பயணத்தை மேற்கொள்ள இணைந்து கொள்ளும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் எனவும் இந்த ஆணையை மீறி எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பது பண்புகளுக்கு முரணானது என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri