வருண ஜயசுந்தர கைது தொடர்பில் இன்று வெளிவந்துள்ள அறிவிப்பு
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சட்டமா அதிபர் இன்று (12.06.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மனு தாக்கல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நியாயமான காரணங்களின்றி தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, வருண ஜயசுந்தரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு இந்த விபரத்தை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.