எங்களை சிறையில் தள்ளி மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியாது
தங்களை சிறையில் அடைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பி விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தம்மையும் தமது தாயாரையும் தந்தையையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து அச்சுறுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அச்சுறுத்தல்கள் மேற்கொள்வதனால், தாம் அஞ்சப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தங்களை சிறையில் தள்ளி நிலக்கரி கொள்வனவு மோசடியை மூடி மறைக்க நினைத்தால் அது நடக்காது என தெரிவித்துள்ளார்.
தங்களை சிறையில் தள்ளி 323 கொள்கலன்கள் ரகசியமாக கொண்டுவரப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க நினைத்தால் அதுவும் நடக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
தங்களை சிறையில் தள்ளி இரண்டு போதைப் பொருள் கொள்கலன்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைகளை மூடி மறைக்க நினைத்தால் அதுவும் நடக்காது என தெரிவித்துள்ளார்.
புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளை மீள வழங்குமாறு நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கரங்களால் வழங்கப்பட்ட காசோலைகள் இவ்வாறு வங்கியில் பணம் இன்றி திரும்ப திரும்பியுள்ளதாகவும் இது வெட்கக்கேடு எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து அல்லது சிறையில் தள்ளி மக்கள் கவனத்தை திசை திருப்ப நினைத்தால் அது நடைபெறாது என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.