அரசு நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் போதைப்பொருள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள தயார்! நாமல் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் குற்றச்சாட்டினை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டால் ஐஸ் போதை பொருள் குறித்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஐஸ் போதைப் பொருள்
ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் இரசாயனத்தை தருவித்தார் என குற்றம் சுமத்தப்பட்ட மனம்பேரி என்பவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் ஓர் உறுப்பினர் எனவும் அவரது உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட 8000 வேட்பாளர்களில் மனம்பேரியும் ஒருவர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் மனம்பேரியுடன் இணைத்து ராஜபக்சர்களை தொடர்புபடுத்தி தர்க்கம் புரிந்தால் அதே வாதத்தின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்த சம்பவத்திற்கும் இந்த தர்க்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
8000 பேரில் ஒருவர் தொடர்பிலான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த இலங்கையிலும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு உண்டு என எவரேனும் வாதம் செய்தால் அதே வாதத்தின் பிரகாரம் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக பெயரிடப்பட்ட 29 பேரில் ஒருவர் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதனால் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் பொறுப்பினை அனுரகுமார திசாநாயக்க ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு தற்கொலைதாரிகளின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளர் எனவும் அவர் கட்சிக்காக செலவிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி மக்கள் விடுதலை முன்னணி இப்ராஹீம் என்பவரின் பணத்தில் வாழ்ந்திருப்பதாகவும் இதனால் அவர்கள் தீவிரவாத பணத்தில் வாழ்ந்திருப்பது புலனாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இப்ராஹாமின் புதல்வர்கள் இருவரும் இந்த தாக்குதல் திட்டமிடல்களை மேற்கொண்டு உள்ளதாக தற்பொழுது குற்றப் புலனாய்வு திணைக்கள பிரதானி முன்னதாக குறிப்பிட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
குறற்ப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உரையாடிய குரல் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதே தர்க்கத்தை பிரயோகித்து உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவத்தின் பொறுப்பினை மக்கள் விடுதலை முன்னணி ஏன் ஏற்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜபக்சர்கள் தொடர்பில் மட்டும் ஏன் வேறுவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் உறுப்பினர் ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டால் அதன் பொறுப்பை கட்சி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச் செயலுக்கான பொறுப்பினை ஜேவிபி ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா என நாமல் ராஜபக்ச மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
