அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக் காட்டுவோருக்கு கொலை மிரட்டல்
அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் துப்பாக்கிச் சூடுகள், இனந்தெரியாத நபர்களின் கொலை கலாச்சாரம் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலைமையினால் சிவில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிவிலியன்கள் மட்டுமன்றி ஊடகத்துறையில் பணியாற்றுவோர் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு கடும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்து பாடம் நடத்த முடியும் என இந்த அரசாங்கம் தேர்தல் பிரசாரங்களின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் நாட்டில் கொலைக் கலாச்சாரம் நகரங்களிலிருந்து பல நகரங்களுக்கு நகர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



