தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு
தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் ஏ9 வீதி, சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (16.10.2024) மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானதோடு இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
பிரதம விருந்தினருடன் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களும் மேள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதம விருந்தினர் அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
மங்கள விளக்கு
அதனைத் தொடர்ந்து, பிரதம விருந்தினர் உட்பட வேட்பாளர்களும் மங்கள விளக்கேற்றினர்.

இந்த நிகழ்வில், முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன், முன்னாள் மருத்துவ நிர்வாக அதிகாரி எஸ்.சிறீ.பவனந்தராஜா, அதிபர் ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி மகளிர் அணி அமைப்பாளர் வெண்ணிலா இராசலிங்கம், ஆசிரியர் காரளசிங்கம் பிரகாஸ், மென்பொருள் பொறியாளர் உதயகுமார் கீர்த்தி ஆகிய வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam