அநுர தலைமையிலான அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டும்
ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்தது என ஏற்றுக் கொள்ள முடியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வளவு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் நாட்டை அபிவிருத்தி செய்ததாக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சகளுக்கு உரிய பாடங்களை கற்பிக்க தவறினால் தேசிய மக்கள் சக்தி நாட்டை அபிவிருத்தி செய்ததாக ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சகளுக்கு உரிய பாடத்தை கற்பிக்கும் நாளிலேயே அநுர தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு உண்மையிலேயே சேவை ஆற்றியுள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவே யதார்த்தம் இதுவே சத்தியம் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். தமக்கு அதிகாரம் இல்லை என்றாலும் உண்மையை பேசுவதற்கு எப்பொழுதும் அஞ்சியது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



