ஆளும் தரப்பு எம்.பி செலுத்தி சென்ற வாகனம் விபத்து
தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார ஓட்டிச் சென்ற கார், ஹெம்மாத்தகம நகரில் உயர் மின்னழுத்த மின் கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், மாவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்தின் பின்னர் மின் கம்பம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பு
இதனால், ஹெம்மாத்தகம நகரம் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஹெம்மாத்தகம மின்சார நுகர்வோர் மைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, அறுந்து விழுந்த மின் கம்பியை பாதுகாப்பாக அகற்றி தற்காலிகமாக மின்சாரம் வழங்கியுள்ளனர்.

விபத்துக்குள்ளான காரில் நாடாளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார மட்டுமே பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam