இலவச ஹஜ் விசாக்களை தமக்கு வழங்குமாறு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அழுத்தம்
ஆளுங்கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேரும், தங்களுக்கு இருபது இலவச ஹஜ் விசாக்கள் வழங்கப்படவேண்டுமென்று அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபிய அரசாங்கத்தினால் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக இலவசமாக வழங்கப்படுகின்ற 'Free Moment Pass' என்று அழைக்கப்படுகின்ற விசாக்களை தமக்கு வழங்குமாறு கோரி ஆளும் கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு அழுத்தம் பிரயோகிப்பதாக தெரிய வருகின்றது.
குறித்த விசாக்கள் ஹஜ் முகவர்களால் அழைத்துச்செல்லப்படும் ஹஜ்ஜாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்கான நபர்கள், சிகிச்சைகள் அளிப்பதற்கான மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை அழைத்துச்செல்வதற்காக ஹஜ் முகவர்களுக்கு வழங்கப்படும் இலவச விசாக்களாகும்.
பாரிய நெருக்கடியில் அரச ஹஜ் குழு
இந்த வருடம் 35 விசாக்களே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 விசாக்களை தங்களுக்கு வழங்குமாறு ஆளும் கட்சியிலுள்ள எட்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச ஹஜ் குழுவிற்கு தொடர்ச்சியாக அழுத்தம் வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விசாக்களை பங்கிடுவதில் அரச ஹஜ் குழு பாரிய நெருக்கடியொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்




