யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்ப்பாணத்திற்கு விழயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.
குறித்த கோரிக்கையில், "யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் 1990ஆம் ஆண்டு முதல் 35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலையம் என்னும் பெயரில் இலங்கை அரசினால் வலிவடக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் கீரிமலை, காங்கேசந்துறை, தையிட்டி ஊரணி, மயிலிட்டி, பலாலி வயாவிளான், கட்டுவன், குரும்பசெட்டி, தோளக்கட்டி ஆகிய கிராமங்களில் மக்களின் காணிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறப்பட்டதற்கு அமைய உடனடியாக காணிகளை விடுவிக்குமாறு வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் கோரிக்கை விடுக்கிறது.
மூடி வைக்கப்பட்டுள்ள வீதி
யுத்தம் முடிந்து 15 ஆண்டு காலம் முடிவடைந்தும் ஐந்தாவது ஜனாதிபதி மாற்றமாகியும் நாலாவது நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டும் பல வாக்குறுதிகள் வழங்கியும் இதுவரை சுமார் 2900 ஏக்கர் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. கடந்த 10.04.2025 அன்று பலாலி வீதியின் ஒரு பகுதி நிபந்தனைகளுடன் பகல் நேரத்தில் மட்டும் திறந்து வைக்கப்பட்டதை வரவேற்கும் அதேநேரம் 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு குழுவின் அனுமதி பெறப்பட்ட காங்கேசன்துறை.
மயிலிட்டி, பலாலி போன்ற கிராமங்களில் விடுவிக்கப்படவிருந்த சுமார் 500 ஏக்கர்கள் காணிகளில் 50 ஏக்கர் காணிகள் மட்டுமே இதுவரை மக்களின் தேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த காணிகளை மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில் இராணுவ கெடுபிடிகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன. தேசிய மக்கள் சக்தி நனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரும் சமமாகவும் சமத்துவமாகவும் நடாத்தப்படும் புதியதோர் இலங்கையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 5 மாதம் கழிந்தும் புதிதாக காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களின் துன்பத்தினை தமது அரசியலுக்கு தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தாது என்று கூறியிருந்தாலும் இனவாதமற்ற அரசியலை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும் சிங்கள மக்கள் கூட ஆதரிக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்?
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் 6.5.2025 அன்று நடப்பதற்கு முன் வடக்கு மக்களின் வாக்குகளை பெற்ற நீங்களும், உங்களது அரசும் உயர்பாதுகாப்பு வலையத்தில் இருக்கும் மக்களுக்கு காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேநேரம் பின்வரும் கோரிக்கைகளை உங்களுக்கும். உங்கள் அரசுக்கும் முன்வைக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
