இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்த ஆளும் தரப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜாவை தேசிய மக்கள் சக்தியின் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்தை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராய்வு
இதன்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் ஆணையுடன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளமை தொடர்பில் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் டி. ராஜா தெரிவித்ததுடன், இந்தியாவின் அரசியல் அனுபவங்களையும் முன்னேற்றப் பயணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நாட்டை நிர்வகிப்பதில் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்கள், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியம், நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் நல்லிணக்கத்தை மேலும் மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆழமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசியல் குழு உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மற்றும் மத்திய குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜனக அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan