நாட்டில் பட்டினியை நாம் இல்லாதொழித்துள்ளோம் -ரில்வின்
தற்போதைய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஓராண்டு காலத்திற்குள் எவரும் பட்டினி என்று கேள்விப்படாத வகையில் நாட்டை ஆட்சி செய்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் .
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு ஏற்பட்டிருந்த பசியை போக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்திருந்த நாடோன்றையே தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில இடங்களில் மக்களுக்கு உண்பதற்கு உணவு இருக்கவில்லை எனவும் சிலர் பாகற்காயை சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாகவும் சில பகுதிகளில் இருந்து செய்திகள் கிடைத்திருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஓராண்டு காலத்தில் இந்த நிலையை மாற்றியதாகவும் எவரும் பட்டினியுடன் இருப்பதாக தற்பொழுது தகவல்கள் வருவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் கடந்த காலங்களில் இருந்ததை விடவும் தற்பொழுது பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சந்தையில் பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓராண்டு காலப்பகுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நீண்ட பயணம் ஒன்றை சொல்ல வேண்டி இருப்பதாகவும் இந்த குறித்த காலப்பகுதியில் மக்களுக்கு அதிக அளவில் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உர மானியம் 25 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டதாகவும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும், அஸ்வெசும கொடுப்பணவுத் தொகை அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான நெருக்கடியுடன் கூடிய பொருளாதார பின்னணியில் நாம் மக்களுக்கு சலுகைகளை வழங்கியதாகவும் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை குறைத்துள்ளதாகவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.



