உலக அரங்கில் நாட்டை இழிவு படுத்த கூடாது
உலக அரங்கில் எமது தாய் நாட்டை இழிவு படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாக அவர் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கங்களில் பதவி வகித்தவர்கள் திறமையானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் போன்றவர்கள் வெளி விவகார அமைச்சர் பதவியை வகித்ததாகவும் அவர்கள் உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் அதே போன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிரிமாவோ பண்டாரநாயக்க போன்ற தலைவர்கள் உலக அளவில் சிறந்த நன்மதிப்பை பெற்றுக் கொண்டவர்கள் என தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்க பிரதிநிதிகள் சர்வதேச நிகழ்வுகளில் அவமரியாதைக்கு உட்படுவதாக தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு இயலாத விடயங்களை செய்வதனால் இந்த நிலை ஏற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இந்திய ஊடகமொன்றுக்கு எழுப்பிய கேள்விக்கு வெளிவிவாகர அமைச்சர் விஜித ஹேரத் அளித்த பதில் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் விமர்சனங்களை தொடர்புபடுத்தி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.