மாகாணத் தேர்தலை நடத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசு தீவிரம்
மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒரு முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.
மக்களுக்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படமாட்டாது எனத் தெரியவருகின்றது.
மாகாண சபைத் தேர்தல்
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒடுக்கல் போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசுக்கு ஆதரவு ஏற்பட்டுள்ளது.
இதனையும் ஒரு வாய்ப்பாகக் கருதி விரைவில் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசு எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக பாதீட்டு கூட்டத் தொடருக்கு மத்தியில் சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.
எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது பற்றி உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்று அறியமுடிகின்றது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan