மாவட்ட ரீதியில் 21 இடங்களில் மே தினக் கூட்டங்களை நடத்த தேசிய மக்கள் சக்தி தீர்மானம்
தேசிய மக்கள் சக்தியின் இம்முறை மே தின நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட ரீதியிலேயே நடத்தப்படவுள்ளன என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் பிரதி அமைச்சருமான ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகளையும், எரிசக்தி தட்டுப்பாடு உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களையும் கருத்திற்கொண்டு பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்க
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டங்களை உள்ளடக்கியதாக 21 மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை அந்தந்தப் பகுதிகளிலேயே ஒருங்கிணைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
தேசிய மக்கள் சக்தி வழமையாக கொழும்பில் நடத்தும் பிரமாண்டமான பிரதான மே தினப் பேரணி இம்முறை இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, கட்சித் தலைவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் பிரிந்து சென்று மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும் இந்த புதிய நடைமுறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam