ரணிலுடன் எவ்வித இணக்கப்பாடும் கிடையாது: ரில்வின்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எவ்வித இணக்கப்பாடும் கிடையாது என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் மட்டுமே தொடர்பு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக சிலர் பொய் வதந்திகளை பரப்பி வருவதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டும் என்ற காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி
கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஒன்றிலேனும் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டக் கூடாது என முயற்சிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இரவில் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசும் இவர்கள் பகலில் தேசிய மக்கள் சக்தி ரணிலுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக பிரச்சாரம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 19 சிரேஸ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
