மொட்டுக் கட்சியின் தலைவர்கள் குற்றம் இழைத்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் குற்றம் இழைத்திருந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
வெறுமனே பொய்யான குற்றச்சாட்டுகளின் மூலம் அபாண்டமாக பழி சுமத்த வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவே 30 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் மத்தியில் அவருக்கு காணப்படும் செல்வாக்கை எவராலும் குறைத்து விட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் பொய்களைக் கூறியே ஆட்சி பீடம் ஏறியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை தாமரை கோபுரம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் பொய் உரைத்தாலும் தற்பொழுது இந்த அபிவிருத்தி திட்டங்கள் மூலம் நாள்தோறும் வருமானம் ஈட்டப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்த திட்டங்களின் ஊடாக வருமானம் ஈட்டப்படுவதாக ஆளும் கட்சியினரே ஒப்புக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கைக்கு புறம்பாக எவராலும் செயல்பட முடியாது எனவும் இயற்கை சரியான நேரத்தில் உயரி பதிலை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆதரவினை பெற்றுக் கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
எவரேனும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறு செய்தவர்களை பாதுகாக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.



