ஆடை விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்த்தவர்களின் நிலை..!
கல்முனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான பிரச்சினையானது நாட்டில் அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் இப்பிரச்சினையை திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கலாம் என சிலர் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளிவாசல்களுக்கான புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
இருப்பினும், இவ்விடயம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும்பான்மையினத்தவர்கள், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசாங்கத்தில் ஏன் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள் என சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பில் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஆராய்கின்றது..