அரசாங்கத்திற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது – ஜோன்ஸ்டன்
அரசாங்கத்திற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கட்சிக் கூட்டமொன்றை நடத்தும்து அரசாங்கம் அச்சமடைகின்றது எனவும் இந்த பயத்தை அரசாங்கம் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை நாமல் ராஜபக்ச ஏற்க உள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தை நடத்தும் போது எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் கூடியதாகவும் இந்த மாற்றம் நிகழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மண்டபம் எமது அரசாங்க ஆட்சியின் கீழ் நிர்மானிக்கப்பட்டது என்றாலும் நாம் சட்ட ரீதியான கொடுப்பனவு செலுத்தி மண்டபத்தை ஒதக்கிக் கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
பொதுவாக அனைத்து கட்சிகளும் செய்வது போன்று நாம் இந்த மண்டப பகுதியை அலங்கரித்தோம் எனவும் அலங்கார கொடிகள் பிரதேச சபை நிர்வாகத்தினால் அகற்றப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அச்சத்தினால் அடக்குமுறைகளை கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எந்தவொரு கட்சியும் நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடியாது என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் எனவும் அதானலேயே இந்த நாடு தோல்வியடைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடிகளை அகற்றி எம்மை தடுக்க முடியாது அடுத்த தேர்தலில் நிச்சயமாக நாம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் பகுதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
