இன வன்முறையை தூண்ட முயல்வோருக்குச் சிறைதான் வாழ்க்கை! எச்சரிக்கும் ஹரினி
இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு, வன்முறைகளுக்கு இடமேயில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்துக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சிறைகளில் அடைக்கப்படுவார்கள்
இதன்போது, இன, மத வன்முறைகளை மீண்டும் தூண்ட முயல்வோர் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.
எவராக இருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், அப்படியானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனையை தேசிய மக்கள் சக்தி அரசு வரவேற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
