அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் எதிர்க்கட்சிகள்.. பிரபு எம்பி குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிரான பல சதித் திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஊடக சந்திப்பு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதன்போது கருத்துரைத்த அவர், "தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர் கட்சியினர் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பல சதித் திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
நாட்டை சீரழித்தவர்கள்..
அந்த வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தனது வீட்டில் எதிர்க்கட்சியினரையும், தோல்வி கண்ட பல எதிர்க்கட்சியினரையும் இந்த நாட்டை வீழ்த்திய இந்த நாட்டை ஒரு வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த 76 வருடங்களை இந்த நாட்டை ஆட்சி செய்து சீரழித்தவர்களை ஒன்று சேர்த்து புதியதொரு சதித்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.
இவர்களின் இந்த செயற்பாட்டின் ஊடாக நாட்டின் ஸ்த்திரத்தன்மை அல்லது இந்த நாட்டின் அரசியலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் தேசிய மக்கள் சக்தி மீது உமது மக்களின் ஆதரவோடுதான் இந்த அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.
ஆகவே மக்களின் மனதை வென்ற இந்த அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு முயற்சியையும் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு இருந்தாலும் அவர்களால் இந்த நாட்டை வீழ்த்த முடியாது இந்த அரசாங்கத்தையும் வீழ்த்த முடியாது என்பதனை மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
