மக்கள் விரோத அரசாங்கமே ஆட்சியில்..! சஜித் குற்றச்சாட்டு
நாட்டில் மக்கள் விரோத அரசாங்கமே ஆட்சியில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தேவையான உப்பை கூட உரிய முறையில் விநியோகம் செய்ய முடியாத அரசாங்கத்தினால் எவ்வாறு மக்களுக்கு நலன்களை வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீர்கொழும்பு கொச்சிகடை பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளம் பற்றி பேசிய அரசாங்கம்
வாய்ப்பேச்சு அரசியலையும் நடைமுறை அரசியலையும் பலர் புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடைகளில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் உறுதிமொழிகள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குறியே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணங்களை மூன்றில் ஒரு பகுதியால் குறைப்பதாக கூறிய அரசாங்கம் மக்களின் அழுத்தம் காரணமாகவே இறுதியில் மின்சாரக் கட்டணங்களை குறைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை உபகரணங்கள் காகிதாதிகளுக்கு வெட் வரி விதிக்கப்பட்ட காரணத்தினால் அவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.வறுமையை ஒழித்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு தெரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது புதுப்பிக்கத்தக்க சக்தி வளம் பற்றி பேசிய அரசாங்கம் தற்பொழுது டீசல் மாபீயாக்களின் கைதிகளாக மாறியுள்ளனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
